பாஜக நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் : அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு.!!

11 months ago 112
ARTICLE AD BOX
oimp

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19ம் தேதியே வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை நாளை (27-ந் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு அமிஞ்சிகரை அய்யாவு மஹாலில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வைகோவுக்கு என்னாச்சு?.. விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதால் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

The station பாஜக நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் : அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு.!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article