பாஜகவுக்காக தவம்.. 2026 தேர்தலில் இதுதான் கருப்பொருள்.. அண்ணாமலை காரசார பேச்சு!

1 week ago 9
ARTICLE AD BOX

2026 தேர்தலில் மும்மொழிக் கொள்கையை முன்வைத்து நாங்கள் தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2000க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையத்திற்கு ராஜா ஆதித்யா சோழன் என தமிழில் பெயர் சூட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் பெருமைக்குரியது.

மருத்துவம் உள்பட தொழில்நுட்ப படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டாவது முறையாக கோரிக்கை வைத்துள்ளார். இதனை திமுக அரசு அமல்படுத்த மறுக்கிறது. சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான தேர்வினை தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியவர் அமித்ஷா” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, பாஜகவினர் ஒட்டியது போன்ற போஸ்டரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு பதிலாக சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றது குறித்து கூறிய அண்ணாமலை, “பாஜகவின் பெயரில் யார் போஸ்டர் ஒட்டியுள்ளார்களோ, அவர்களே அங்கிருந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.

Annamalai

அதில் எனக்கும், இந்த போஸ்டருக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்துள்ளார். எங்களது போஸ்டரில் தேசியத் தலைவர், மாநில தலைவர், பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் இருக்க வேண்டும் என நிலைப்பாடு உள்ளது. அதை நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால், அமித்ஷாவை சிறுமைப்படுத்த வேண்டும் என வேறு யாரோ ஒருத்தரின் படத்தை ஒட்டி, பாஜக தொண்டரின் பெயரை போட்டு ஒட்டுகிறார்கள் என்றால், அது பாஜகவின் போஸ்டர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு எதிராக திமுக பதில் சொல்ல முடியாமல், தேசியத் தலைவரை போஸ்டர் ஒட்டி கேவலப்படுத்தும் செயலாக திமுக தன்னைத்தானே கேவலப்படுத்தி வருகிறது. காவல்துறையினர் இவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக எடுத்திருக்கக்கூடிய கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருவதற்கு சான்றாக, மே இறுதிக்கு முன்பே ஒரு கோடி கையெழுத்து வாங்கி விடுவோம் நிலையில் ஆதரவு உள்ளது.

2026ல் பாஜக ஆட்சிக்கு வந்து மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம். நீங்கள் கொள்ளை அடிப்பதற்காக, கமிஷன் அடிப்பதற்காக ஏன் மத்திய அரசு பத்தாயிரம் கோடி கொடுக்க வேண்டும்? லோக்சபா தேர்தலுக்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கையை பாஜக ஆரம்பித்தோம்.

ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததால் அவ்வளவு வாக்குகள் கிடைக்குமா என்பதை 2026 தேர்தலில் பாருங்கள். ஒரு கோடியைத் தாண்டியும் மக்களின் ஆதரவு இருக்கும். பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் வரிசையில் நின்று கையெழுத்து போட்டு வருகின்றனர்.

திமுகவின் குழந்தைகளுக்கு ஒரு நியாயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்திரபாபு நாயுடு நேற்று பேசுகையில், 2 மொழி, 3 மொழி என சண்டையிடுகிறீர்கள், பத்து மொழி கற்றுக் கொடுப்போம் என கூறியுள்ளார். தெலுங்கு பேசுபவர்கள் உலகம் முழுவதும் திறன்பட இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

பாஜக சாராத அனைத்து முதலமைச்சர்களுக்கும் நீட் குறித்து ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் நிலைமை என்ன ஆனது? உதயநிதி ஸ்டாலின் நீட் கையெழுத்து என நடத்தியது என்ன ஆனது? அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள். பாஜக கையெழுத்து இயக்கத்திற்கு இணையதளத்தில் அனைத்து எண்ணிக்கையும் இருக்கிறது.

ஒரு மொபைல் நம்பரில் இருந்து ஒரு முறைதான் பதிவு செய்ய முடியும். மத்திய அரசு எந்த சண்டையும் போடவில்லை. நாங்கள் ஆரோக்கியமாக விவாதம் செய்து வருகிறோம். எங்களோடு சண்டையிடுவதும், பாஜகவும் மோடி அவர்களும், தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டமும் வந்துவிடக்கூடாது என சண்டை இடுபவர்கள் மாநில அரசு தான்.

2026 தேர்தலில் மும்மொழிக் கொள்கையை முன்வைத்து நாங்கள் தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளோம். மூன்றாவது மொழியாக இந்தி படியுங்கள் என கோரிக்கை வைத்து தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ஏன் டிகே சிவக்குமாருக்கும், சித்தராமையாவிற்கும் கடிதம் எழுதவில்லை?

சம்பந்தமே இல்லாத மொழி பிரச்னைக்கு கடிதம் எழுதுகிறார். உண்மையாகவே, தமிழக மக்களின் முதலமைச்சராக இருந்தால், விவசாய மக்களுக்கான முதலமைச்சராக இருந்தால், மேகதாது அணை கட்டுவதை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் கர்நாடக முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? ஆனால், நாளை பிரதமருக்கு கடிதம் எழுதுவார்.

ஞானசேகரன் விவகாரத்தில் எஸ்ஐடி விசாரணை முடித்த அன்று, அது குறித்து பேசலாம். அப்போது யார் அந்த சார் என தெரியவரும். அமலாக்கத்துறை, சாராய அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால் எப்படி திசை திருப்புவதாக இருக்கும்? நேற்று டாஸ்மாக் சாராய நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் இடத்தில் ரைடு நடந்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை சட்டவிரோத டாஸ்மாக் வியாபாரம் தொடர்பாகவே இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது. மக்களுக்கு இலவச பொருட்களை எப்படி வழங்கி வருகின்றனர். இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது? இதை அமலாக்கத்துறை ரெய்டு செய்வது எப்படி தவறாக இருக்கும்?

இதையும் படிங்க: இரும்புத்திரை பட பாணியில் லோன் கமிஷன் திருட்டு.. சிக்கியது எப்படி?

இவர்கள் எல்லாம் உத்தமர்கள் என எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் மீது மத்திய அரசு சார்ந்த புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்தினால், அதை எப்படி திசை திருப்புவதாக இருக்கும்? ஒவ்வொரு கொள்கை விவகாரத்தில் நேரடியாக களத்தில் இருப்பவர்கள் நாங்கள்தான். திமுகவினர் தான் திசைதிருப்பி வருகின்றனர்.

பாஜக நோட்டா கட்சி என இருந்த நிலையில், இப்போது கட்சிகள் பாஜக வேண்டும் என தவமிருக்கும் நிலையை உருவாக்கி இருக்கிராம். அதற்கு பெருமைப்படுகிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்கிற நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது பலமாக உள்ளது, பலமாகிக் கொண்டுள்ளது. தேசிய கட்சிகளுடைய அரசியல் என்பது நம்பிக்கைதான். இன்று வாருங்கள், நாளை கழட்டி விடுவோம் என பாஜக இருந்ததில்லை” எனத் தெரிவித்தார்.

  • Tamannaah about Sura film failure அட்டு படம்…நான் நடிச்சு இருக்கவே கூடாது…வன்மத்தை கக்கிய தமன்னா.!
  • Continue Reading

    Read Entire Article