பாடகி தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்- மனக்கஷ்டத்துடன் பேட்டியளித்த சின்மயி…

4 weeks ago 39
ARTICLE AD BOX

சின்மயி VS தீ

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல்களில் “முத்த மழை” என்ற பாடலை தமிழில் “தீ” பாடியிருந்தார். ஆனால் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடகி தீயால் பெர்ஃபார்மன்ஸ் செய்ய முடியாத சூழல் ஏற்படவே சின்மயி அப்பாடலை பாடினார். 

singer chinmayi wants to apologize to singer dhee in muththa mazhai song issue

சின்மயி அப்பாடலை பாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை குவித்தது. சின்மயியின் குரலில் அப்பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும் தீயின் குரலுடன் சின்மயியின் குரலை ஒப்பிட்டு பேசத்தொடங்கிவிட்டனர். சமூக வலைத்தளங்களில் தீயின் குரலை விட சின்மயியின் குரல் மிக அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இந்த கருத்துகள் “தீ சிறந்த பாடகரா? சின்மயி சிறந்த பாடகரா?” என்ற விவாதத்திற்கு வழிவகுத்துவிட்டது.

இது ரொம்ப தப்பு…

“எங்கள் இருவரையும் ஒப்பிடவேண்டிய அவசியமே இல்லை. நான் தீயிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இன்னும் 15 வருடங்களில் அவர் 100 சின்மயியிகளையும் 100 ஸ்ரேயா கோஷல்களையும் முந்திவிடலாம். அவருக்கென்று ஒரு தனி இடம் உருவாகும். தீக்கென்று ஒரு தனி குரல் வளம் இருக்கிறது. யாராலும் அவரைப்போல பாடமுடியாது” என்று அப்பேட்டியில் பேசியுள்ளார் சின்மயி. 

தமிழ் சினிமாவில் பாடுவதற்கு தன்னை மறைமுகமாக தடை செய்துள்ளார்கள் என சின்மயி கூறுகிறார். இக்காரணத்தால்தான் அவரால் “தக் லைஃப்” திரைப்படத்தில் பாடமுடியவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். எனினும் “முத்த மழை” பாடலின் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகளில் சின்மயி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

  • singer chinmayi wants to apologize to singer dhee in muththa mazhai song issue பாடகி தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்- மனக்கஷ்டத்துடன் பேட்டியளித்த சின்மயி…
  • Continue Reading

    Read Entire Article