ARTICLE AD BOX

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இப்படத்திற்கு பின் விஜய் சினிமாவில் இருந்து விலக முழு நேர அரசியலில் பணியாற்ற உள்ளார்.

மேலும் படிக்க: சூர்யா கிட்ட அது சுத்தமா பிடிக்கல.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசிய ஜோதிகா..!
முன்னதாக, 20 வருடங்களுக்கு முன்பு அதாவது 2004 ஆம் ஆண்டில் வெளியான கில்லி படம் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் வந்து கில்லி திரைப்படத்தை தியேட்டரை உற்சாகமாக பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடிகர் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சுமார் எட்டு கோடி பட்ஜெட்டில் தயாரான கில்லி படம் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. அதாவது, தமிழில் முதலில் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த முதல் படம் என்ற பெருமையும் பெற்றது. தரணி மற்றும் கில்லி படத்தில் நடித்த பிரபலங்கள் பலர் ரீரிலிசை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில், கில்லி படம் குறித்து விஜய் கூறிய ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

அதாவது, கில்லி படத்தில் உங்களுக்கு பிடித்தமான பாடல் என்ன என்று கேட்டதற்கு விஜய் கில்லியில் எல்லா பாடலுமே மாசான பாடல் தான் இருக்கும். அதில், எனக்கு மிகவும் பிடித்தது அர்ஜுனரு வில்லு பாடல் தான். அந்த காட்சியில், என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் ஒரே ஆளாக அடித்துப் போட்டுவிட்டு திரிசாவை காப்பாற்றி ஒரு ஜீப்பில் வேகமாக செல்வேன். அந்த மாஸ் சீனுக்கு ஏற்றார் போல் அந்த பாட்டும் ஒரு எனர்ஜியாக இருக்கும். இப்போது, காரில் ஏறினாலும் அந்த பாடலை போட்டு விடுவேன். அந்தப் பாடலை போட்டால் தான் காரை அப்படியே ஒரு க்ரிப்பா ஓட்டிட்டு போவேன் என்று தெரிவித்துள்ளார்.
The station பாட்டுன்னா இப்படி இருக்கணும்… இந்த பாட்டு தான் விஜய்க்கு ரொம்ப பிடிக்குமாம்..! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.