பாதி எரிந்த நிலையில் காவலர் சடலமாக மீட்பு.. மதுரையை கதிகலங்க. வைத்த சம்பவம்!

1 month ago 31
ARTICLE AD BOX

மதுரையில், பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஈச்சனேரி பகுதியில், பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட நபர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசன் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரிக்கையில், இவரின் மனைவி சமீபத்தில் விபத்தில் சிக்கி, கடந்த மார்ச் 1 அன்று சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Fire accident

36 வயதாகும் காவலர் மலையரசன், விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். மேலும், இவர் தற்போது சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில், தனிப்படைப் பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபல நடிகையின் வீட்டருகே பிரம்மாண்ட பங்களா கட்டும் அரசியல் கட்சி தலைவர்.. அப்படி எதுவும் இல்ல!

எனவே, அவரின் மரணத்தில் மர்மம் தொடர்வதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனைவி இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவருக்கு யாருடனும் முன்விரோதம் இருக்கிறதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Polical Party Leader Built New Bungalow Near Actress House பிரபல நடிகையின் வீட்டருகே பிரம்மாண்ட பங்களா கட்டும் அரசியல் கட்சி தலைவர்.. அப்படி எதுவும் இல்ல!
  • Continue Reading

    Read Entire Article