ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் பாலிவுட்டில் கால் பதித்தார்.
20 வருடமாக உச்ச நட்சத்திரமாக விளங்கும் நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியம் தரும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க : ரூ.500 கோடி வசூல்.. குட் பேட் அக்லி செய்யப் போகும் சாதனை!
இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை அண்மையில் பிரம்மாண்டாமாக நடைபெற்றது. மேலும் நேரலையில் படப்பிடிப்பை படக்குழு அசத்தியது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி முக்கிய ரோலில் நடிக்கிறார். ரெஜினா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்கிறார்.

படத்தை 55 கோடி ரூபாயில் முடிக்க படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் படம் முடிக்க ரூ.112 கோடி பட்ஜெட் ஆகியுளளதாக அண்மையில் பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் படத்திற்கு நயன்தாரா பாதி சம்பளத்தை வாங்கிய நிலையில், மீதி சம்பளத்தை லாபத்தில் பங்கு கேட்டுள்ளாராம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள்தான் லாபத்தில் பங்கு கேட்டு வந்தனர். தற்போது முதன்முறையாக நடிகை நயன்தாராவும் கேட்டுள்ளார்.
