ARTICLE AD BOX
வித்தியாசமான கிரைம் திரில்லர் படம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் “பாபநாசம்”. இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் இப்போதும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் கதாநாயகன் போலீஸாரால் அடிவாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ரஜினிகாந்தை அடிப்பது போல் காட்சிப்படுத்தினால் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்காது என்று இயக்குனர் யோசித்தார். அந்த சமயத்தில்தான் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆதலால் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார்.
படத்தில் கமல்ஹாசனின் தலையீடு?
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசஃப் சமீபத்தில் ஒரு தமிழ் ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில் பேசிய அவர், “ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி எல்லோரும் ‘கமல் சார் படத்தில் தலையிடுவார்’ என கூறினார்கள். ஆனால் எனக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார். மானிட்டர் பக்கம் கூட வரமாட்டார். அவர் டைரக்டர்களின் ஆக்டர்” என கமல்ஹாசனை புகழ்ந்துள்ளார்.

கமல்ஹாசன் எப்போதும் கதையில் தலையிடுவார் என்று அவர் மீது பல விமர்சனங்கள் உள்ளது வழக்கம். அந்த வகையில் ஜீத்து ஜோசஃப் கமல்ஹாசனை டைரக்டர்ஸ் ஆக்டர் என்று பாராட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
