ARTICLE AD BOX

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சங்கர் என்கிற சிவசங்கர் கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டின் அருகே சிவசங்கர் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சிவசங்கரை வெட்டி உள்ளனர்.
இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சிவசங்கர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக சிவசங்கர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் திருவந்திபுரம் பகுதியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து
திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் அங்கு விரைந்தனர்.
காவல் துறையினர் கண்ட குற்றவாளிகள் தப்பிவிட முயற்சி செய்தனர். இதில் வெங்கடேஷ் சதீஷ் ஆகிய இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் முகிலன், வெங்கடேஷ், சதீஷ், ராஜா, கௌஷிக் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
The station பாமக பிரமுகர் மீது கொலைவெறித் தாக்குதல்… 5 பேர் கைது : கடலூரில் அதிர்ச்சி சம்பவம்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.