ARTICLE AD BOX
பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருவருக்குமான மோதல் போக்கு கடந்த 7 மாதங்களைக் கடந்து நீடித்து வருவதால் பாமக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. பாமகவில் தன் உயிர் மூச்சு உள்ள வரை நான் தான் பாமகவிற்கு தலைவராக இருப்பேன் என்று ராமதாசு தெரிவித்துள்ளார்.
தான் வழங்கிய செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டு அன்புமணி செயல்பட வேண்டும், இல்லை என்றால் தொண்டராக இருந்து பணியாற்றட்டும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
பாமகவில் இருந்த அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி விட்டு தனது ஆதரவாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார்.
 பாமகவில் தந்தைக்கும், மகனுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
வன்னியர் சங்க மகளிர் மாநாட்டிற்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் அன்புமணியின் பெயர் மற்றும் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டஅச்சடிக்கப்பட்டு வழங்கபட்டு வருகிறது.
 ராமதாஸ் தலைமையில் கடந்த 8ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழு கூட்டத்திலும் அன்புமணியின் பெயரும் புகைப்படமும் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
 
                        3 months ago
                                35
                    








                        English (US)  ·