ARTICLE AD BOX
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக மேடையில் டாக்டர் ராமதாஸுக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் கிளம்பின. இருவரும் தனி தனி கோஷ்டிகளை சேர்த்துக்கொண்டு கட்சிக்குள்ளேயே தகராறில் ஈடுபடுவதாகவும் செய்திகள் பரவியது.
அதனை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி தைலாபுர தோட்டத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸுடன் 82 மாவட்டச் செயலாளர்களும் 80 மாவட்டத் தலைவர்களும் புறக்கணித்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை தொடர்ந்து கட்சிக்குள் இருவருக்கும் இடையே தகராறு இருப்பதாக வலுவான பேச்சுக்கள் பரவத் தொடங்கின.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், தனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மனக்கசப்பு எதுவும் இல்லை என பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கப்போவதாக பல வதந்திகள் கிளம்பியுள்ளன. இப்படிப்பட்ட வதந்திகளை கிளப்பிவிடுபவர்கள் யார் என்று எனக்கு தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?” எனவும் அப்பேட்டியில் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 months ago
59









English (US) ·