பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

1 month ago 20
ARTICLE AD BOX

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்க: கணவனின் வேட்டியை அவிழ்த்து.. மனைவி செய்த கொடூரம் : நடுங்கிப் போன நெல்லை!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணி அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த தினம் கடந்த 10 நாட்களாக பாஜக மகளிர் அணி சார்பில் பல்வேறு விதமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு இன்னல் இருந்தாலும் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். இந்திய நாடு முழுவதும் தனது ஆன்மீக பணிகளால் நாட்டை ஒருங்கிணைத்தவர் என பேசினார்.

பாமக அரசியல் கட்சி பிரச்சனை தந்தை மகனுக்கான பிரச்சினை இதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது. கூட்டணி குறித்து கருத்து வேறுபாடு என்றால் அதற்கு நாங்கள் பேச முடியாது. தேர்தல் வரும் சமயத்தில் அந்தந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.

யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை எல்லாம் அந்த கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும். நான் தேர்தல் கமிஷன் இல்லை எனவும் தேர்தல் வரும் சமயத்தில் அந்தந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

வரி உயர்வை குறைக்க திமுக அரசு பரிசீலனை செய்து வருகிறது. மக்கள் பரிசீலனை செய்வார்கள் திமுகவிற்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று.

கொரோனா விற்கு ஏற்கனவே தடுப்பூசிகள் உள்ளதால் பாதிப்புகள் இருக்காது. இருந்தாலும் சுகாதார துறை முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

  • str 49 movie is changed to mani ratnam வேறு இயக்குனருக்கு கைமாறிய STR 49? ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாட்டா காட்டும் சிம்பு?
  • Continue Reading

    Read Entire Article