பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

2 months ago 38
ARTICLE AD BOX

பிரபாஸின் புதிய முயற்சி

பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப் பிறகுதான் அவர் இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமானார். “பாகுபாலி” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “சாஹோ”, “ராதே ஷ்யாம்” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.  இத்திரைப்படங்கள் சரியாக போகவில்லை.

அதனை தொடர்ந்து “ஆதிபுருஷ்” திரைப்படத்தில் பிரபாஸ் நடித்தார். இத்திரைப்படத்தை பலரும் ட்ரோல் செய்த நிலையில் படுதோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த “சாஹோ”, “கல்கி 2898AD” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது “கண்ணப்பா” திரைப்படத்தில் பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

புது படத்தின் டீசர்

இந்த நிலையில் பிரபாஸ் நடித்த ஒரு ஹாரர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. “ராஜாசாப்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸுடன் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மாருதி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இத்திரைப்படத்தின் டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும், “பிரபாஸுக்கு ஹிட் படம் கொடுக்கனும்னு ஆசையே இல்லை”, “படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபாஸ் நடித்துள்ள இத்திரைப்படத்தை இந்தியாவின் மிக பிரம்மாண்டமான ஹாரர் ஃபேன்டசி திரைப்படம் என அறிவித்துள்ளது படக்குழு. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் இதோ…

  • prabhas starring the rajasaab movie teaser launched பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…
  • Continue Reading

    Read Entire Article