ARTICLE AD BOX
கடனை வசூலிக்க வந்த வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றதால் அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார் இளம்பெண்.
பீகார் மாநிலம் பரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 30 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம், கடன் வசூல் செய்ய வந்த வாலிபர், வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதையும் படியுங்க: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி மட்டுமல்ல… டாடா குழுமத்துக்கு குவியும் வரவேற்பு!
இதனால் ஆத்திரமடைந்த பெண், அரிவாளை எடுத்து வாலிபரில் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 ஆனால் அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே வசூல் செய்ய வந்த இடத்தில், கடனை கொடு இல்லையென்றால் என்னுடன் உடலுறவு வை என வாலிபர் கூறியதால், அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியதாக பெண் கூறியுள்ளார்.
இது குறித்து எந்த புகாரும் போலீசாருக்கு வராத நிலையில், தாமாக முன் வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
                        4 months ago
                                42
                    








                        English (US)  ·