ARTICLE AD BOX
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2024ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போதும் பிரஜ்வல் ரேவண்ணா வேட்பாளராக அறிவிப்பட்டார்.
இதனிடையே அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. பல பெண்கள் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். 2,976 ஆபாச வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெர்மனியில் தலைமறைவான பிரஜ்வ ரேவண்ணாவை மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வர முன்னாள் பிரதமர் தேவே கவுடா அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் திரும்பி வந்தார்.
தொடர்ந்து 14 மாதங்களாக சிறையில் இருந்த அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அதில் ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டது.
