பிஎஸ்ஜி மருத்துவ மாணவி மரணத்தில் விலகாத மர்மம்… விசாரணையின் போது கிடைத்த முக்கிய துப்பு?!

1 month ago 26
ARTICLE AD BOX

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பவபூரணி முதுகலை முதலாம் ஆண்டு மயக்கவியல் படித்து வந்தார்.

அவர் 6 ம் தேதி மருத்துவமனை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.5 ம் தேதி இரவு அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் பவபூரணி பணியில் இருந்து உள்ளார். 6 ம் தேதி காலை 6 மணி அளவில் இறந்து கிடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இவர் எப்படி ? இறந்தார். இறப்புக்கான காரணம் கல்லூரியில் என்ன ? நடந்தது என்கின்ற விவரம் தெரியவில்லை. அதனால் சந்தேக மரணமாக கருதி பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

உயிரிழந்த மாணவி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம் தாமாக விசாரணையை துவக்கி உள்ளது.

11 ம் தேதி மாலை ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொந்தோஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, பீளமேடு ஆய்வாளர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டது.

இறந்த மாணவி தரப்பில் மூன்று பேர் இருந்தனர். அன்றைய தினம் பணியில் இருந்தவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவி உயிரிழந்த இடத்தில், இருந்து சிரிஞ்ச், இரண்டு எம்.எல் மருந்து ஆகியவை கோவை தடவியவியல் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இறப்பதற்கு முந்தைய நாள் இரவு பணியில் இருந்து வேறு யார் ? ஒருவருடன் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி தினமும் தனது தம்பியுடன் போனில் பேசுவது வழக்கம். அவர் பேச்சு முழுவதும் மொபைல் போனில் பதிவு ஆகி உள்ளது. அந்த ஆடியோ பதிவுகள், விசாரணை அறிக்கை ஆணையத்தில் இன்று 14 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The mystery surrounding the death of a PSG medical student remains unresolved... A key clue found during the investigation?!

மாணவியின் தந்தை கந்தசாமி அவர் மகனுடன் முந்தைய நாள் இரவு போனில் பேசியதாகவும், அதே போல் அன்று இயல்பாகவே பதில் அளித்து உள்ளதாகவும், முந்தைய நாள் இரவு மகளுடன் யாரோ ? சண்டையிட்டு உள்ளனர்.

மகளின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய உயர்மட்ட அளவில் பெண் அதிகாரி நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • netizens trolled that shankar said that his dream project is velpari வேணாம் சார் விட்ருங்க-ஷங்கர் சொன்ன வார்த்தையால் கையெடுத்து கும்பிடும் நெட்டிசன்கள்?
  • Continue Reading

    Read Entire Article