ARTICLE AD BOX
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உள்ளது. இருப்பினும் முதல் 4, 5 சீசன்களை விட சமீபத்தில் சீசன்கள் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பிக் பாஸ் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த முறை தனது சம்பளத்தை விஜய் சேதுபதி உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 9வது சீசனுக்காக அவர் ரூ.75 கோடி சம்பளம் வாங்க உள்ளார்.
அதே சமயம் போட்டியாளர்கள் தேர்வு ஒரு புறம் நடந்து வருகிறது. இதில் ஷபானா, வினோத் பாபு, உமைர் உள்ளிட்ட குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ளவர்கள் பெயரும் அடிபடுகிறது

இந்த நிலையில் சீரியல் நடிகை நக்ஷத்ரா இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
