பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திடீர் கைது… கண்ணீர் விட்டு அழுத காட்சி!

1 month ago 44
ARTICLE AD BOX

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய தர்ஷன், தனது வீட்டு முன் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் தவித்தார். அப்போது அந்த கார் யாருடையது என்பதை அறிய அருகில் உள்ள டீக்கடையில் விசாரித்த போது அங்கு இருந்த உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதி மற்றும் மனைவி மகேஷ்வரியுடையது என்பது தெரியவந்தது.

20 நிமிடமாக வீட்டுக்குள் போக முடியாமல் குறித்து தர்ஷன் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைக்கலப்பாக மாறியது.

தர்ஷனும், அவரது தம்பியும் பேச்சுவார்த்தை நடத்திய போது, நீதிபதியின் மகன் ஆதி மற்றும் மகேஸ்வரி அவர்களுடைய உறவினர்கள் ஒட்டுமொத்தமமாக தாக்கியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் கர்ப்பமாக இருக்கும் ஆதியின் மனைவியை ர்ஷன் அடித்ததாக காவல் நிலையத்தில் நீதிபதி மகன் தரப்பினர் புகார் அளித்தனர்.

இது குறித்து தர்ஷன் பேசும்போது, என் தம்பியை அடிக்கறாங்க, நான் பாத்துட்டு சும்மாவா நிக்க முடியும், சூடா இருந்த காபியை என் தம்பி முகத்தில் வீசிறாரு. நடிகர்னா பெரிய இவனானு கேட்கறாங்க, எவ்வளவு பிரச்சனைதான் வரும் என கதறி அழுதார்.

Bigg Boss Dharshan and his Brother Arrested

இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படும் நீதிபதியின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்ஷன் மற்றும் அவரது தம்பியை கைது செய்துள்ளனர். விசாரரித்ததில், தர்ஷன் தாக்கியதால் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளனர். இருப்பினும், தர்ஷன் தரப்பில் நியாயம் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்? 
  • Continue Reading

    Read Entire Article