ARTICLE AD BOX
பிக்பாஸ் புகழ் ராஜு
“கனா காணும் காலங்கள்; கல்லூரியின் கதை”, “சரவணன் மீனாட்சி சீசன் 2”, “ஆண்டாள் அழகர்” ஆகிய பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அறியப்பட்டவர் ராஜு ஜெயமோகன். இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் பாக்யராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பாக்யராஜ் எழுத்தில் உருவான “துணை முதல்வர்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து “மனிதன்”, “நட்புனா என்னனு தெரியுமா?”, “முருங்கைக்காய் சிப்ஸ்” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருன்ந்தார். எனினும் “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இவரது திறமையை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ராஜு ஜெயமோகன் ரசிகர்களின் மனதை கவர்ந்து அந்த சீசனின் டைட்டிலையும் வென்றார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் நடித்த அவர், தற்போது “பன் பட்டர் ஜாம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

“பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தில் ராஜுவுக்கு ஜோடியாக ஆதியா பிரசாத் மற்றும் பாவ்யா திரிகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ராகவ் மிர்தாத் என்பவர் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கில்மா படம்?
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் “பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தை அவரது ஸ்டைலில் விமர்சித்து பேசியுள்ளார். “ஒரு வித்தியாசமான கதை கொடுத்த உத்வேகத்தில்தான் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் என தெரிய வருகிறது. அதாவது விவேக் ஒரு படத்தில் சிரீயல் ஷூட்டிங்கில் உள்ளே புகுந்து, என்னடா சீரீயலில் ஒரே கள்ள காதலாக இருக்கிறது என கேட்பார். அதற்கு அந்த சீரீயலின் இயக்குனர், அவரது உதவியாளரை கதை சொல்ல சொல்லுவார்.
லதாவுக்கும் ஆனந்துக்கும் கள்ள தொடர்பு இருப்பது உண்மைதான். இது லதாவோட புருஷன் ராஜேஷுக்கு தெரியாது. ஆனால் ராஜேஷுக்கு வசந்திக்கும் சின்ன கனெக்சன் இருக்குது. வசந்தி யாரென்றால் ஆனந்துடைய காதலி. நடராஜ் அவளை ஒன் சைடா லவ் பண்ணுகிறான். ஆனந்த் ரேவதியை வச்சிருக்குறது வசந்திக்கு தெரியாது. கதை விளங்கிச்சா? என்று அவர் கேட்பார். அதற்கு விவேக் ‘டேய் ஒன்னுமே புரியலையடா. யார் யாரை வச்சிருக்கான்னே தெரியலையேடா’ என்ற கூறுவார். அது மாதிரிதான் இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் விரிவாக இந்த படத்தை எடுத்து வைத்திருந்தால் இந்த படம் ஒரு கில்மா படமாக ஆகியிருக்கும்” என விமர்சித்துள்ளார். இவரது விமர்சனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
