ARTICLE AD BOX
நயன்தாரா VS தனுஷ்
கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்” என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியானது. அதற்கு முன்பு இந்த ஆவணப் படத்திற்கான டிரெயிலர் வெளியானது. அதில் தனுஷ் தயாரித்த “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து அந்த காட்சியை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன் பின் நயன்தாரா தனுஷை குறித்து மிகவும் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷும் ஒரு அறிக்கை வெளியிட சமூக வலைத்தளம் பரபரப்புக்குள்ளானது.

பிச்சை எடுத்து பாருங்க
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த “குபேரா” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியபோது, “இயக்குனர் ஷேகர் கம்முலாவை பற்றி விசாரித்தபோது அவர் பயங்கரமான இயக்குனர் என கூறினார்கள். ஆனால் அவரை நம்பி போனதற்கு திருப்பதி அடிவாரத்தில் உச்சி வெயிலில் நடு ரோட்டில் பிச்சை எடுக்க வைத்துவிட்டார்” என நகைச்சுவையாக கூறினார்.
அதனை தொடர்ந்து மேலும் பேசிய தனுஷ், “ஆனால் அப்படி கையேந்தி பிச்சை எடுக்கும்போது தெரிந்தது நாம் ஓடுகிற ஓட்டம் எல்லாம் அர்த்தமில்லாதது என்று. இங்கே அவ்வளவு போட்டி அவ்வளவு பொறாமை. முன்பெல்லாம் நாம் பெரிய ஆளாக ஆகவேண்டும் என உழைப்போம். நம்ம நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என உழைப்போம். ஆனால் இப்போதெல்லாம் அடுத்தவர் உழைப்பை எப்படி கெடுப்பது. அடுத்தவன் பெயரை எப்படி கெடுப்பது என்றுதான் உழைக்கிறார்கள். அது போன்ற ஆட்கள் ஒருவாட்டி கை நீட்டிப்பாருங்கள். சாப்பிடுகிற ஒரு வேளை சோற்றுக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும் என்பது புரியும்” என கூறியிருந்தார். இவரின் பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தனுஷ் நயன்தாராவை தாக்குகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“குபேரா” திரைப்படத்தில் தனுஷ் பிச்சையெடுப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
