ARTICLE AD BOX
பிரபல பின்னணி பாடகி நேற்று இரவு அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் மீட்கபட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிஜமாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் கல்பனா. கடந்த சில நாட்களாக அவரது வீட்டின் கதவு பூட்டியே இருப்பதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க: லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
இதையடுத்து குடியிருப்பு வாசிகள் சங்கத்துடன் கதவை தட்டிய போது திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே பார்த்த போது மயங்க கிடந்த கல்பனாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிகளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர் எதற்காக இந்த தற்கொலை முயற்சியை எடுத்தார் என்பது தெரியவில்லை.
நேற்று இரவு ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட கல்பனா தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கல்பனா ஐதராபாத்தில் தனியாகத்தான் இருந்துள்ளார். அவரது கணவர் சென்னையில் வேலை நிமித்தமாக வந்ததால் அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தற்போது கல்பனாவுடன் அவரது தோழியும் சக பாடகியுமான சுனிதா உடன் உள்ளார்.
அண்மையில் கல்பனாவுடைய மகளுக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தில் இருந்தே அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழ், தெலுங்கு, மலையாள சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று வருகிறார்.