ARTICLE AD BOX
நடக்குமா? நடக்காதா?
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கமல்ஹாசன் இந்த புராஜெக்டில் இருந்து வெளியேறினார். அதாவது இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்று திட்டமிடப்பட்டதால் கமல்ஹாசன் தயாரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டது என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

தயாரிப்பாளராக சிம்பு
இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தை சிலம்பரசனே தயாரிப்பதாக சிம்புவே அறிவித்தார். இத்திரைப்படம் சிம்புவின் 50 ஆவது திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. எனினும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பாதாக கூறப்படுகிறது.
பிரச்சனைக்கு மேல் பிரச்சனை
ஏஜிஎஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாம். அதாவது பத்து நாட்கள் டெஸ்ட் ஷூட் எடுத்துவிட்டு அதனை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு போட்டுக்காட்டி, நெட்பிலிக்ஸ் இந்த படத்தை வாங்கிக்கொள்வதாக இருந்தால் தொடர்ந்து பயணிக்கலாம், இல்லை என்றால் கஷ்டம் என்று கூறிவிட்டதாம்.
தேசிங்கு பெரியசாமி இந்த புராஜெக்ட்டை தொட்டதில் இருந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக வந்தது. ஒரு வழியாக இந்த பிராஜெக்ட் டேக் ஆஃப் ஆகிவிட்டது என்று நினைத்தால் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வந்து நிற்கிறது.