ARTICLE AD BOX
அதிக வரவேற்பை பெற்ற பீல் குட் திரைப்படம்
கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ரூ.8 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.80 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஃபீல் குட் திரைப்படமாகவும் இத்திரைப்படம் அமைந்தது.
மதம், இனம் அனைத்தையும் விட மனிதமே முக்கியம் என்ற கருத்தாக்கத்தை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் இதயத்தை தொட்ட திரைப்படமாகவும் ஆனது. இத்திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
ஹீரோவாக களமிறங்கும் அபிஷன்!
இந்த நிலையில் அபிஷன் ஜீவிந்த் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தை “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தில் பணியாற்றிய இணை இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.