ARTICLE AD BOX
வளர்ந்து வரும் ஹீரோ
“லவ் டூடே” திரைப்படத்தின் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த “டிராகன்” திரைப்படம் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது “LIK” என்ற திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் பிரதீப் ரங்கநாதன் தற்போது “Dude” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் டைட்டில் சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது.
டைட்டிலால் வந்த வினை
அதாவது கன்னடத்தில் தேஜ் என்று ஒரு நடிகர் உள்ளாராம். அவர் “Dude” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாராம். பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளது. ஆதலால் கன்னடத்தில் இத்திரைப்படத்தின் டைட்டில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.