ARTICLE AD BOX
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இதையும் படியுங்க: ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து காவல் என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் நாகேந்திரன். இவர் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

காவல் படத்தை புன்னகை பூ கீதா தயாரித்திருந்தார். விமலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

இதன் பிறகு திரைத்துறையில் மற்ற பணிகளில் பணியாற்றி வந்த நாகேந்திரன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது.
நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது.
நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு… pic.twitter.com/9EAd64fHvw
இதை அறிந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நண்பனை இழந்துவிட்டேன் என உருக்கமான பதிவை ஒன்றை போட்டுள்ளார்.