பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

21 hours ago 7
ARTICLE AD BOX

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கெலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் சுவட்சா வொட்டர்கர் என்பவர் செய்திவாசிப்பாளராக தெலுங்கு செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்க: சேலை கட்டிய அனைவருக்கும் ரூ.1000… திமுகவை டேமேஜ் செய்த பாஜக பிரமுகர்!

சுவட்சா எழுத்தாளராகவும், தெலுங்கானா தனி மாநில போராட்டத்தின் தீவிர பங்கேற்பாளராகவும் செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்ற அவர் தனது மகள் மற்றும் பூர்ணசந்திரராவ் என்பவருடன் ஜவகர் நகரில் வசித்து வந்தார்.

இதனிடையே நேற்று இரவு வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இவரது மரணம் ஊடகத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திஹயள்ளது.

Famous newsreader commits suicide... Family in shock!

சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தனது தந்தையிடம் பேசிய சுவட்சா, பூரண்சந்திர ராவுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், என்னை திருமணம் செய்து கொள்வதாக முதலில் கூறிய அவர், தற்போது திருமண பேச்சை எடுத்தாலே திசை திருப்பி தகராறில் ஈடுபடுகிறார் என கூறியுள்ளார்.

இதையடுத்து மகளுடைய மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவள் தைரியமானவள், தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல, பூரணசந்திர ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

  • vetrimaaran release video about a news that dhanush asked money to vetrimaaran தனுஷ் என்னிடம் பணம் கேட்டார்? திடீர் வீடியோவை வெளியிட்ட வெற்றிமாறன்…
  • Continue Reading

    Read Entire Article