ARTICLE AD BOX
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன்.
இதையும் படியுங்க: பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!
மலேசிய தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சிவக்குமார் பிரபல நடிகராக மாறினார். இவரின் குரல் வளம் தனிச்சிறப்பு கொண்டதால், ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
கதைகளுக்கு உயிர்க் கொடுக்கும் குரல் கொண்டவர் என மலேசிய ரசிகர்களால் பாராட்டை பெற்றவர். இந்த நிலையில் கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தாயுடன் வசித்து வந்த சிவக்குமார், நேற்று 11வது மாடியில் இருந்து தாயுடன் சேர்ந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இவரின் இறப்பு தமிழ் கலைத்துறை மட்டுமல்லாமல், கலைஞர்கள், நண்பர்கள், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இவர் இறப்பு குறித்து தகவல் வேகமாக பரவி வருகிறது.
