பிரபல நடிகர் மீது கொலை மிரட்டல் புகார்… சாப்பாடு கூட போடுவதில்லை என முதல் மனைவி பகீர்!

4 days ago 12
ARTICLE AD BOX

பிரபல நடிகரின் முதல் மனைவி கொடுத்த கொலை மிரட்டல் புகார் கோலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்தில் இருந்த நடிகர் சரவணன். சரியான பட வாய்ப்புகளும், சரியாக கதை தேர்வுகளையும் செய்யாததால் மார்க்கெட்டை இழந்தார்.

பின்னர் பருத்தி வீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் மூலம் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். கடந்த 2003ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை திருமணம செய்த அவர் 2019ல் ஸ்ரீதேவி என்பவரை திருமணம் செய்தார்.

இருவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் சரவணன் வசித்து வந்தார். இந்த நிலையில் முதல் மனைவி சூர்யஸ்ரீ ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் நானும் சரவணுனும் கடந்த 1996 முதல் 2003 வரை திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் 2003ல் தான் திருமணம் செய்தோம்.

நான் கஸ்டம்ஸ் ஏஜென்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் தொழில் நடித்திய வருமானத்தில் தான் குடும்பமே நடத்தினோம். அப்போது சரவணுனுக்கு பல முறை நிதியுதவி செய்தேன். ஆனால் இப்போது சாப்பாடு கூட போடுவதில்லை.

2வது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு பராமரிப்பு தொகையாக ரூ.40 லட்சம் தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார், உடனே அவர் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் சரவணன் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஜெயிலர், கார்கி, லவ்வர், ராயன், சார் என தொடர்ந்து நடித்த அவர், சமீபத்தில் தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதியின் தந்தையாக நடித்தார்.

  •  Aishwarya Rajesh விஜய் நேரடியாக அழைத்தால் கூட போகமாட்டேன்… எனக்கு ஐடியா இல்ல : ஐஸ்வர்யா ராஜேஷ் தடாலடி!
  • Continue Reading

    Read Entire Article