ARTICLE AD BOX
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார்.
இதையும் படியுங்க: வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!
இந்த நிலையில் இம்மாத 16ஆம் தேதி அந்த இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது 5 கோடியை 90 லட்ச ரூபாயை நடிகர் மகேஷ்பாபுவிற்கு அந்த நிறுவனங்கள் கட்டணமாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தொகையில் மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் செக்காகவும், 2 கோடி 50 லட்ச ரூபாயை நடிகர் மகேஷ்பாபு ரொக்கமாகவும் பெற்றுக் கொண்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.