ARTICLE AD BOX
ஷெஃபாலி ஜரிவாலா
“காண்டா லகா” என்ற மியூசிக் வீடியோ மூலம் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர் ஷெஃபாலி ஜரிவாலா. மும்பையைச் சேர்ந்த இவர் பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்துள்ளார். அதனை தொடர்ந்து “ஸைதானி ராஸ்மின்” என்ற சீரியலிலும் நடித்தார். மேலும் இவர் “முஜே ஷாதி கரோகி”, “ஹுடுகாரு” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 13
ஷெஃபாலி ஜரிவாலா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13 ஆவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகவும் வலம் வந்தார். இந்த நிலையில் நடிகை ஷெஃபாலி மாரடைப்பால் திடீரென மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஷெஃபாலிக்கு 42 வயது ஆகும் நிலையில் மாரடைப்பில் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.