பிரபல பிக்பாஸ் நடிகை மரணத்திற்கு அந்த சிகிச்சைதான் காரணம்? வெளியான பகீர் தகவல்!

19 hours ago 6
ARTICLE AD BOX

ஷெஃபாலியின் திடீர் மரணம்

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13 ஆவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் “கண்டா லகா” என்ற மியூசிக் வீடியோவின் மூலம் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர். மும்பையைச் சேர்ந்த இவர் பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கெடுத்துள்ளார். “ஸைதானி ராஸ்மின்” என்ற தொலைக்காட்சித் தொடரின் நடித்த இவர் “முஜே ஷாதி கரோகி”, “ஹுடுகாரு” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஷெஃபாலி மாரடைப்பால் மரணமடைந்ததாக வெளிவந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 42 வயதிலேயே ஷெஃபாலி மாரடைப்பால் உயிரிழந்த செய்தி பலருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

the reason behind bigg boss fame shefali jariwala death

இதுதான் காரணம்?

எந்த இதயக்கோளாறுக்கான மருத்துவ வரலாறும் இல்லாத ஷெஃபாலி எப்படி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது பலரின் சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் அவர் தனது உடல்நலத்தில் தீவிரமாக அக்கறை கொண்டவர் எனவும் ஆரோக்கியமான உணவு பழக்கம்,  உடற்பயிற்சி போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததற்கு காரணம் அவர் செய்துகொண்ட ஒரு சிகிச்சையே என்று கூறுகின்றனர்.

அதாவது தன்னுடைய உடல் தோற்றம் வயதாக தெரிவதை தடுப்பதற்காக ஷெஃபாலி ஒரு சிகிச்சையை செய்துகொண்டாராம். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக சினிமா நடிகைகள் தங்களது அழகை பராமரிப்பதற்காக சில சிகிச்சைகள் செய்துகொள்வது வழக்கம்தான். அந்த வகையில் ஷெஃபாலியின் மரணத்திற்கு இந்த சிகிச்சைதான் உண்மையான காரணமாக இருக்கக்கூடும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

  • the reason behind bigg boss fame shefali jariwala death பிரபல பிக்பாஸ் நடிகை மரணத்திற்கு அந்த சிகிச்சைதான் காரணம்? வெளியான பகீர் தகவல்!
  • Continue Reading

    Read Entire Article