ARTICLE AD BOX
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக் ஸ்மிதா, தற்கொலை செய்தது இன்றளவும் மறக்க முடியாதது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் கொடிக்கட்டி பறந்த சில்க் தனக்கென தனி ரசிகர்கள் படையை உருவாக்கினார். சில்க்குடன் ஒரு பாடல் இருந்தாலே படம் ஹிட் என்ற பாணியை உருவாக்கினார். படத்தில் எத்தனை பெரிய நடிகர்கள் இருந்தாலும் சில்க் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தது.
இப்படி கவர்ச்சியில் ஒரு கோட்டையை உருவாக்கிய சில்க், சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டது இன்றளவும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜா அளித்த பேட்டி ஒன்றில், சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவலை கூறினார். ஒரு முறை திருப்பதி செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு, சில்க் என்னிடம் வந்து ஒரு நகைபெட்டியை திறந்து காட்டினார்.

நான் திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார். சில்க்குடன் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் என்பவரின் மகனை திருமணம் செய்ய உள்ளதாகவும், அந்த பையனின் பெயரை என் காதில் சொன்னதாக புலியூர் சரோஜா கூறியுள்ளார்.

6 months ago
60









English (US) ·