பிரபாஸ் என்ன இப்படி ஆயிட்டாரு? முடி எல்லாம் கொட்டிப்போய் காணப்படும் புதிய தோற்றம்!

1 month ago 23
ARTICLE AD BOX

பாகுபலி புகழ் பிரபாஸ்

தெலுங்கு சினிமா உலகில் 2002 ஆம் ஆண்டு நுழைந்த பிரபாஸ் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் “பாகுபலி” திரைப்படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. அதுவரை தெலுங்கு நடிகராக மட்டுமே வலம் வந்த பிரபாஸ் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் பிரபலமானார். எனினும் “பாகுபலி” திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிய வெற்றியை காணவில்லை. 

ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “சலார்”, “கல்கி 2898 AD” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. தற்போது “தி ராஜாசாப்” என்ற ஹாரர் திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். 

Prabhas gone bald photo viral on internet

“தி ராஜாசாப்” திரைப்படத்தை தொடர்ந்து “ஃபவ்ஜி”,  “ஸ்பிரிட்” போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபாஸ் வயதான தோற்றத்தில் முடி கொட்டிப்போய் காணப்படும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Prabhas gone bald photo viral on internet

புகைப்படத்தின் பின்னணி?

வயதான தோற்றத்துடன் முடி கொட்டிப்போய் தென்படும் பிரபாஸின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துப்போயினர். ஆனால் இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. எவரோ ஒருவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்புகைப்படத்தை உருவாக்கி இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். அது காட்டுத்தீ போல் பரவியிருக்கிறது. இதன் மூலம் இப்புகைப்படம் உண்மையான புகைப்படம் அல்ல என்பது தெரிய வருகிறது. 

  • Prabhas gone bald photo viral on internet பிரபாஸ் என்ன இப்படி ஆயிட்டாரு? முடி எல்லாம் கொட்டிப்போய் காணப்படும் புதிய தோற்றம்!
  • Continue Reading

    Read Entire Article