ARTICLE AD BOX
இந்தியாவின் டாப் இயக்குனர்
“பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில் பாலிவுட் திரைப்படங்களே அதிகளவில் வசூல் செய்துகொண்டிருந்தது. அதனை முறியடித்த பெருமை ஷங்கரை அடுத்து ராஜமௌலிக்கே உண்டு.
“பாகுபலி” திரைப்படத்தை தொடர்ந்து “பாகுபலி 2”, “RRR” போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது.

சினிமாவுக்கு Bye Bye
மகேஷ் பாபு திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகாபாரதத்தை திரைப்படமாக உருவாக்க உள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ளதாகவும் அதே போல் இத்திரைப்படம் 2030 ஆம் ஆண்டு வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் “மகாபாரதம்” திரைப்படம்தான் ராஜமௌலியின் கடைசித் திரைப்படம் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகப்போகிறாராம். இவ்வாறு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.