ARTICLE AD BOX
ட்ரோலுக்குள்ளாகும் நடிகை
தெலுங்கில் “Ondh Kadhe Hella” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதனை தொடர்ந்து தெலுங்கில் நானியின், “நானி’ஸ் தி கேங் லீடர்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் தமிழில், “டாக்டர்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தற்போது அவர் கவினுடன் ஒரு திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
சமீப காலமாக அவர் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவு வருகின்றன. அதுமட்டுமல்லாது அவரது நடிப்பை குறித்த ட்ரோல் மீம்கள் பல சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணம் “The Route” என்ற PR நிறுவனம்தான் என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

கட்டம் கட்டும் “The Route”?
பிரியங்கா மோகன் முதலில் “The Route” என்ற PR நிறுவனத்துடன் பல காலம் பயணித்து வந்தார். ஆனால் சமீபத்தில் அந்த நிறுவனத்துடனான தொடர்பை முறித்துக்கொண்டு வேறொரு PR நிறுவனத்துடன் தற்போது பயணித்து வருகிறார். “The Route” நிறுவனத்தில் இருந்து பிரியங்கா மோகன் வெளிவந்த பிறகுதான் அவர் குறித்து ட்ரோல் மீம்கள் அதிகமாக வரத் தொடங்கியதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாவது “The Route” நிறுவனம்தான் திட்டம்போட்டு இதனை செய்வதாக பலர் கூறுகின்றனர். ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
விஜய், பூஜா ஹெக்டே, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் “The Route” நிறுவனத்துடன் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
