ARTICLE AD BOX
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்காவுக்கு 36 வயது ஆகிறது. எந்த நிகழ்ச்சி கிடைத்தாலும் புகுந்து விளையாடுவார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கு.
பிரியங்காவுக்கும் விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வரும் பிரவீன் என்பவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குள் இந்த உறவு முறிந்தது. பிரியங்காவை தன்வசப்படுத்த பிரவீன் எண்ணியதாகவும், ஆனால் பிரியங்கா சுதந்திர பறவையாக இருக்கவே விரும்பினார். பணம் விஷயத்தில் பிரியங்கா கெட்டிக்காரியாகவே இருந்தார்.
பிரவீன் தனது கைக்குள் வைக்க எண்ணியும், பிரியங்கா சிக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார். இந்த நிலையில்தான் திடீரென நேற்று முன்தினம் பிரியங்கா 2வது திருமணம் செய்த போட்டோ, வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது.

இதை பிரியங்காவே தனது சமூகவலைதளங்களில் உறுதி செய்த பின் பரபரப்பு அடங்கியது. ஆனால் பிரியங்கா திருமணம் செய்த நபர் VJ வசி என்பதும், இவர் லண்டனை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. வெள்ளை முடி, தாடியுடன் 50 வயதுக்கு மேல் உள்ளவரை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பிரியங்காவுக்கும் திருமணமான வசி என்பவருக்கும் ஏற்கனவே 8 வருடமாக தொடர்பு உள்ளது. வசி, முன்னரே பிரியங்காவை சந்தித்து பேசியுள்ளதாகவும், இருவரும் நட்பாக கட்டிப்பிடித்ததை நானே பார்த்திருக்கிறேன்.

ஈசிஆரில் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடந்துள்ளது.மெகந்தி பங்கஷன், ஆட்டம், கும்மாளம் என மொத்த செலவையும் ஏற்று நடத்தியது விஜய் டிவிதான் என்றும் கூறப்படுகிறது.
விஜய் டிவி பிரியங்கா திருமணத்தை நிகழ்ச்சியாக ஒளிபரப்பி காசு சம்பாதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பயில்வான் பல விஷயங்களை போட்டுடைத்துள்ளார்.
