ARTICLE AD BOX
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இதையும் படியுங்க : 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!
அண்மையில் ₹1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படத்துவக்க விழா நடந்தது. அதில் சுந்தர் சி, குஷ்பு, நயன்தாரா, மீனா, ரெஜினா, டிடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதல்முறையாக நேரலை காட்சியும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவை பார்த்ததும் கட்டிப்பிடித்து, புன்னகை செய்த நயன்தாரா, சீனியர் நடிகையான மீனாவை கண்டுகொள்ளவே இல்லை.
அருகருகே நின்றாலும், நயன்தாரா மீனாவை பார்த்து ஒரு சின்ன புன்னகை கூட செய்யவில்லை. இதனால் நயன்தாராவுக்கு திமிரு அதிகம், ஓவர் பில்டப் என்ற மீனாவுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் நயன்தாரா ஆதரவாளர்கள், இல்லை இருவரும் பேசினர் என கூறினர். இந்தநிலையில் மீனா சமூகவலைதளங்களில் பதிவிட்டது பேசுபொருளாகியுள்ளது.
தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு போட்டுள்ள மீனா, நிறைய ஆடுகளுடன் இருக்கு சிங்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, எப்போதும் தனியாக இருக்கும் சிங்கம் ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது என்ன சொல்கிறது என்று கவலைப்படாது என பதிவிட்டுள்ளார்.
மேலம் உங்கள் நல்ல உள்ளத்தை மட்டும் நினைத்து பெருமைபடுங்கள். எல்லோரிடமும் அது இருக்காது என பதிவும் போட்டுள்ளதால், இது நயன்தாராவை குறிப்பிட்டுத்தான் பதிவிட்டிருக்கிறார். மீனா சரியான பதிலடி கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.