ARTICLE AD BOX
ரேஸர் அஜித்குமார்
அஜித்குமார் சமீப மாதங்களாக கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். துபாயில் நடைபெற்ற Dubai 24H என்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதனை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12H Mugello கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதன் பின் பெல்ஜியம் நாட்டில் நடந்த Circuit de Spa-Francorchamps கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இவ்வாறு பல நாடுகளில் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகிறார் அஜித்குமார்.

மாஸ் ஆக கார் ஓட்டு அஜித்குமார்…
இந்த நிலையில் பில்லா பட ஸ்டைலில் அஜித்குமார் கண்களில் கூலிங் கிளாஸுடன் கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. GT4 European Championship போட்டியில் கலந்துகொள்ள மிசானோ என்ற இடத்திற்கு காரில் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
— Ajith (@ajithFC) July 15, 2025