புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை காதலில் விழ வைத்த இன்ஸ்பெக்டர்.. உல்லாசத்தால் பறி போன பதவி!

3 months ago 34
ARTICLE AD BOX

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரகர்கள் தகராறு செய்வது தொடர்பாக கடந்த 4 மாதம் முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கூறினார்.

அந்த சமயம் இரவுப் பணியில் இருந்து விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசரணை நடத்தி பிரச்சனையை தீர்தது வைத்தார்.

இதையும் படியுங்க: ஊழியரை கடத்தி மிரட்டல்? பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார் : போலீசார் வழக்குப்பதிவு!

இதற்காக இன்ஸ்பெக்டருக்கு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து தினமும் இளம்பெண்ணுக்கு குட் மார்னிங், குட் நைட் என மெசேஜ் செய்து வந்துள்ளார்.

நாளடைவில் சகஜகமாக இருவரும் பழக, தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டதாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். மேலும் இளம்பெண்ணை காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றியுள்ளனர். பல நேரங்களில் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என இளம் பெண் வற்புறுத்தவே, தொடர்பை துண்டித்துள்ளார் இன்ஸ்பெக்டர்.

மேலும் இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய பெரிய பிரச்சனையானது. இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை முயற்சி செய்ததால், இளம்பெண்ணுடன் முற்றிலும் தொடர்பை துண்டித்துள்ளார் கண்ணன்.

மேலும் தனக்கு விவாகரத்து ஆக வில்லை எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன், என்னை தொந்தரவு செய்யாதே என கூறி ஒதுங்கியுள்ளார்.

ஆனால் இளம்பெண் அதை ஏற்க முடியாமல், கண்ணனை தொந்தரவு செய்துள்ளார். இதனால் இளம்பெண் மற்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன இளம்பெண் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு விருகம்பாக்கத்தில் இருந்து மயிலாப்பூருக்கு குடிபெயர்ந்தார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு, இளம்பெண் மீண்டும் கண்ணனை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால், ராமாபுரம் காவல் நிலையத்திற்கு போன் செய்து இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்துள்ளார்.

The inspector Having fun with the young woman who came to file a complaint

ஆனால் அது பற்றி அவர்கள் கண்டுகொள்ளாததால், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷ்னர் சிபி சக்ரவர்ததியிடம் இளம்பெண் புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்களை ஆதாரமாக காட்டி புகார் அளிதார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டரை விசாரிக்க அழைத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டரோ மருத்துவ விடுப்பு எடுத்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து காத்திருப்போர் பட்டியலில் கண்ணை மாற்றி உத்தரவிட்ட இணை கமிஷ்னர், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நடந்த உண்மையை அறிந்து கொண்டார். மேலும் இன்ஸ்பெக்டர், அவருக்கு உதவியாக இருந்த கார் ஓட்டுநர்களான காவலர்கள் என அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்.

  • Famous actor who kidnapped and threatened employee... Police file case! ஊழியரை கடத்தி மிரட்டல்? பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார் : போலீசார் வழக்குப்பதிவு!
  • Continue Reading

    Read Entire Article