ARTICLE AD BOX
திருவள்ளூர் பொன்னேரி பாஜக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜினி காவல் நிலையத்தில் கடந்த நான்காம் தேதி நிகிதா என அண்ணாமலையுடன் தான் எடுத்த புகைப்படத்தை அவதூறாக பரப்புவதாக பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையும் படியுங்க: 3 கிலோ கஞ்சாவுடன் சென்னை திரும்பிய இளைஞர் கொலை வழக்கு : பரபரப்பு திருப்பம்..!!
திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதாவைதனது போட்டோவை நிகிதா என ஒளிபரப்புவதாகவும் தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னேரி காவல் நிலையத்தில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி என்பவர் கட்சி பிரமுகர்களுடன் சென்று புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் புகாரைப் பெற்று மூன்று நாட்கள் ஆகியும் செந்தில்வேல் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.