ARTICLE AD BOX
அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல்
அனிருத்தின் இசை நிகழ்ச்சி
சமீப காலமாக திரைப்பட இசையமைப்பாளர்கள் பலரும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அனிருத்தும் உலகம் முழுவதிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் “Hukum” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அனைத்து டிக்கெட்டுகளும் காலி
இதற்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்கிய நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட 37 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக கூறுகின்றனர். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 37 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பலரும் கூடுதல் டிக்கெட்டுகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்தான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.