ARTICLE AD BOX
மாபெரும் வெற்றி திரைப்படம்
கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “பாகுபலி” திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ரூ.600 கோடிகளுக்கும் மேல் வசூலை பெற்றது.
இம்மாபெரும் வெற்றியை தொடர்ந்து “பாகுபலி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.1,800 கோடி வசூல் செய்து இமாலய சாதனையை படைத்தது. இவ்வாறு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்த இந்த இரண்டு பாகங்களும் தற்போது ஒன்றாக இணையவுள்ளது.
 புதிய பாகுபலி திரைப்படம்!
அதாவது “பாகுபலி 1 & 2” ஆகிய இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு புதிய பாகுபலி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து அதனை ஒரே திரைப்படமாக வெளியிட உள்ளார்கள்.
இந்த புதிய “பாகுபலி” வெர்ஷன் 3 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக உருவாகியுள்ளதாம். இத்திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். “பாகுபலி” இரண்டு பாகங்களுமே ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த புதிய வெர்ஷனுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
 
                        3 months ago
                                37
                    








                        English (US)  ·