ARTICLE AD BOX
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவருக்கு, சின்ன கவுண்டர் படம் பெரிய மைல்கல்லாக அமைந்தது.
இதையும் படியுங்க: ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…
தொடர்ந்து பிரபு, கமல், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ், கார்த்திக், சத்யராஜ் என அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பாப்புலரானார் சுகன்யா.

2003ல் மென்பொறியாளரைதிருமணம் செய்த அவர், ஒரு வருடத்திற்குள் வாகரத்து பெற்றார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், முன்னாள் கணவரும் நானும் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லை, ஆனால் என் அக்கா மகளை என் மகள் என தவறாக கீழ்த்தரமாக எழுதினர்.

பலமுறை இது குறித்து நான் விளக்கமளித்துவிட்டேன்,. ஆனாலும் தொடர்ந்து வதந்தி பரப்பினர். இதனால் ஒரு சேனல் மீது புகார் கொடுத்து சமீபத்தின் தான் அந்த வழக்கு முடிந்ததாகவு கூறினார்.
