புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகர்..விஜய்க்கு வைத்த முக்கிய கோரிக்கை.!

3 days ago 8
ARTICLE AD BOX

மரணப்படுக்கையில் ஷிஹான் ஹுசைனி

1986ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி.

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,தளபதி விஜய்யின் பத்ரி திரைப்படம் மூலம் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்,அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க: மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!

அண்மையில்,யூடியூப் பேட்டியில்,தனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்திருப்பதை பகிர்ந்த ஹுசைனி,இது மூன்று காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.தனது மரபணு கோளாறால், வைரஸ் தாக்கத்தால் அல்லது எதையாவது மன அழுத்தத்தால் இந்த நோய் உருவாகியிருக்கலாம் என்று அவர் கூறினார்.தினமும் உயிர்வாழுவதற்காக இரண்டு யூனிட் ரத்தமும்,பிளேட்லெட்ஸும் தேவைப்படும் நிலையில் இருந்தாலும்,மனவலிமையுடன் போராடுவதாக உறுதியளித்துள்ளார்.

“நான் இதை எதிர்கொண்டு மீண்டு வருவேன்,லட்சக்கணக்கானவர்களுக்கு கராத்தே கற்றுக்கொடுத்தேன்.மரணத்தை பயந்து உட்காரும் மனப்பான்மையுடன் நான் இருக்க மாட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறதோ, அந்த நாட்களில் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.இது எனக்கு ஒரு சோதனை மட்டுமே,” என்று அவர் கூறினார். தனது மருத்துவச் செலவுக்காக யாரிடமும் உதவி கேட்கப்போவதில்லை என்றும், தனக்கே உரிய சொத்துக்களை விற்று தான் அதை சமாளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வில் வித்தையை தமிழ்நாட்டில் பரப்ப வேண்டும் என்பதற்காக, நடிகர் விஜய் முன்னெடுக்க வேண்டும் எனவும்,நடிகர் பவன் கல்யாணுக்கு என்னுடைய இடத்தில் தான் கராத்தே சொல்லி கொடுத்தேன்,இப்பொது அந்த இடத்தை நான் விற்க போகிறேன்,அதை பவன் கல்யாண் முன் வந்து வாங்க வேண்டும் என்று அந்த பேட்டியில் கூறியிருப்பார்.இவருடைய உடல்நிலை மீண்டும் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

  • Shihan Hussaini health update புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகர்..விஜய்க்கு வைத்த முக்கிய கோரிக்கை.!
  • Continue Reading

    Read Entire Article