ARTICLE AD BOX
முன்னணி நடிகை
மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் நவ்யா நாயர். இவர் தமிழில் “அழகிய தீயே”, “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி”, “பாசக்கிளிகள்”, “மாயக்கண்ணாடி” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நவ்யா நாயர் விமான நிலையத்தில் தனது கைப்பையில் பூ வைத்திருந்ததற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூ வைத்திருந்ததற்கு அபராதமா?
கடந்த வாரம் ஓணம் பண்டிகை உலகம் முழுவதுமுள்ள கேரள மக்களால் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகை நவ்யா நாயர் ஓணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அவரது கைப்பையில் பூ எடுத்துச்சென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் இறங்கிய பிறகு, அவரது கைப்பையை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அதில் பூ இருப்பதை பார்த்திருக்கிறார்கள். அவர் பூ வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதனால் நவ்யா நாயர் வேதனைக்குள்ளானதாக தெரிய வருகிறது. இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
