ARTICLE AD BOX
மோகன்லால் – எம்புரான் பட சர்ச்சை
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது.படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாலும்,சில காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பூகம்பமாய் வெடித்துள்ளது.
இதையும் படியுங்க: சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில கலவரக் காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன என சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.இதனால் இந்தக் காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு எதிரானதாகவும்,வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதாகவும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த நடிகர் மோகன்லால்,தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதில்எம்புரான் படத்தை உருவாக்கிய போது சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருட்கள்,உங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிகிறேன்.
ஒரு கலைஞனாக எந்த ஒரு திரைப்படமும்,அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக் குழுவிற்கு எதிரானதாக இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.எனவே,எம்புரான் படக்குழுவும் நானும் இந்தத் தவறுக்காக மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்,கடந்த நான்கு தசாப்தங்களாக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன்,நீங்கள் இல்லாமல் மோகன்லால் என்ற ஒரு நடிகன் இருக்க முடியாது என கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையால் எம்புரான் படத்தில் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.