ARTICLE AD BOX
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம் செய்யப்பட்டார்.
2012ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் தோல்வியை தழுவியதால், தமிழில் வாய்ப்பு கிடைக்காத அவருக்கு, தெலுங்கில் ஜாக்பாட் அடித்தது.
இதையும் படியுங்க: தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?
அடுத்தடுத்து தெலுங்கில் படங்கள் ஹிட் ஆனதால், இந்தி பட வாய்ப்பும் கிடைத்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அவரை பூப் போட்டு கொண்டாடினர் ரசிகர்கள்.
ஆனால் அந்த படம் பெரியதாக பிரபலம் கொடுக்கவில்லை என்றாலும், இந்தியில் முன்னணி நடிகை லிஸ்டில் வந்தார். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. ரெட்ரோ, கூலி, ஜனநாயகன் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், ராசியில்லாத நடிகை என பூஜா அழைக்கப்படுகிறார்.

இயக்குநர்களின் பிழையால் பூஜா ஹெக்டேவை ராசியில்லாத நடிகை என கூறுவதாக என அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் ஒரு பக்கம் பொங்க, மறுபக்கம் ஏற்கனவே பீஸ்ட் படம் ஓட வேண்டிய படம், ஆனால் பூஜா இருந்ததால்தான் ஓடவில்லை, இதுல ஜனநாயகன் வேற வரப்போகுது, தளபதியின் கடைசி படம் வேறு என மற்றொரு தரப்பில் இருந்து ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
இதை தவிர காஞ்சனா 4 படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். கூலி படத்தில் ஒரு பாடலுக்கு ரஜினியுடன் குத்தாட்டம் ஆடுவது குறிப்பிடத்தக்கது.
