ARTICLE AD BOX
பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த பிரபல நடிகையின் சடலத்தை கைப்ற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த பாகிஸ்தான் நடிகை ஹூமைரா அஸ்கர் அலி, ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சமீபத்தில் பிரபலமாக பேசப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் பூட்டிய வீட்டில் இருந்து நடிகை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33 வயதாகும் அந்த நடிகை இறந்து 9 மாதங்கள் ஆவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: தலையே சுத்தவைக்கும் சூறாவளி பொண்ணாச்சு! வெளியானது பூஜா ஹெக்டே நடமாடிய “கூலி” படத்தின் மோனிகா பாடல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவரது தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உட்பட அனைத்தும் அந்த தேதியுடன் நின்றுள்ளதால், மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரை சேர்ந்த இவர் சினிமா வாய்ப்புகளுக்காக கராச்சிக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பே வந்துள்ளார். குடும்பத்தினரை எப்போதாவது சந்திப்பதால் ஹூமைராவுடன் குடும்பத்தினர் தொடர்பு இல்லை. இதனால் அவர்களுக்கும் இந்த சம்பவம் தெரியாமல்போனது.

9 மாதங்களாக சடலமாக இருந்தும்,அருகில் குடியிருப்பு பகுதிகள் காலியாக இருந்ததால் யாருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வர காரணம், ஹூமைரா பல மாதங்களாக வாடகை கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் வந்து பார்த்த போது இந்த விஷயம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் சினிமா வட்டாரத்தை இந்த சம்பவம உலுக்கியுள்ளது.
