ARTICLE AD BOX
மதுரையை சேர்ந்த 30 வயதாகும் பெண் காவலர் சென்னை தாம்பரத்தில காவலர் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் அப்பகுதியில் உள்ள சேலையூர் பாரதி நகர் பகுதியில் விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
காவலர் என்பதால் ஆயுதப்படை காவலரான கபடி பயிற்சியாளர் வீரமணி என்பவர் அறிமுகமானார். இருவரும் நட்பாக பேசி பழகி வந்த நிலையி, இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதையும் படியுங்க: 2026ல் தே.ஜ கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணுகிறார் அமித்ஷா : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, பெண் காவலரை வீட்டுக்கு அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் காவலர், வீரமணியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் தனது நண்பன் சரத்குமார் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரான சரத்குமாரும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார்.
உடனே தற்போதைக்கு குழந்தை வேண்டாம், திருமணம் செய்து விட்டு பெற்றுக்கொள்ளலாம் என பெண் காவலரை ஏமாற்றியுள்ளார். இதையறியாத பெண் போலீஸ், திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அவர் காலம் தாழ்த்திவிட, பின்னர் தான் சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவருக்கு, வீரமணியும், சரத்குமாரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றியுள்ளதை அறிந்தார்.
இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த சேலையூர் அனைத்து மகளிர் காவல் ஆணையர், வீரமணி மற்றும் அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் சரத்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.