ARTICLE AD BOX

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது பெண் கணவருடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஆதிபுரிஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
அப்படி செல்லும் போது அந்த கோயில் பூசாரி அசோக் பாரதி பழக்கமானார். இதனால் தனது நிலையை பூசாரியிடம் எடுத்து கூறிய பெண், கணவர் தன்னிடம் நெருக்கமாக இருப்பதில்லை என கூறியுள்ளார். அதற்கு உங்கள் வீட்டில் தீய சக்தி உள்ளது, அதை விரட்ட வேண்டும் என்றால் ருத்ராட்ச மாலை அணிந்தால் போதும் என கூறியுள்ளார்.
உடனே ருத்ராட்ச மாலையை கேட்டுள்ளார் அந்த பெண். அதற்கு பூசாரியோ, வடபழனி கோவிலில் நான் வாங்கி கொடுக்கும் ருத்ராட்ச மாலையை முருகன் முன் படைத்து நீ அணிந்தால் தீயசக்தி அணுகாது என கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் கடந்த 6ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று ருத்ராட்ச மாலையை வாங்கியுள்ளனர். பின்பு முருகன் முன்பு படைக்க சென்ற போது நடை சாத்தப்பட்டதால், கோயில் திறந்த பிறகு வரலாம் என கூறினார்.
இதையும் படியுங்க: அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட வடு மறையும் முன்பே.. முதலமைச்சரை விமர்சனம் செய்த அண்ணாமலை!
மேலும் பக்கத்தில தனது உறவினர் வீடு உள்ளது என கூறி, அங்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அந்த வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லை, ஆனால் வீட்டு சாவியை வைத்திருந்த பூசாரி வீட்டை திறந்து இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது பெண்ணுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டிவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார் பூசாரி அசோக் பாரதி. ஆனால் அடிக்கடி கோவிலுக்கு மனைவி செல்வதை நோட்டமிட, அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார் அந்த பெண்ணின் கணவர்.
அப்போது மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவர், கையும் களவுமாக இருவரையும் பிடித்துள்ளர். மனைவியை சரமாரியாக அடத்த கணவர், மீண்டும் கோயில் பூசாரியிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி இருவரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

பின்னர் இருவரிடமும் உங்கள் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது, வெளியே காட்டி அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டிய அவர், மனைவியிடம் ரூ.10 லட்சம பணத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உனது பெற்றோருக்கு இந்த வீடியோவை அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த பெண், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷ்னரிடம், கோவில் பூசாரி மற்றும் கணவர் குறித்து புகார் அளித்தார்.
இணை கமிஷ்னர் உத்தரவின் பேரில், மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் இருவர் மீது தனித்தனியாக புகார்களை பதிவு செய்து பூசாரி மற்றும் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The station பெண் பக்தரை வசியம் செய்து கோவில் பூசாரி உல்லாசம்.. மறைந்திருந்து வீடியோ எடுத்த கொடூர கணவர்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.