ARTICLE AD BOX

சென்னையில் பெற்ற மகளை தந்தையும், அண்ணனும் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக தாய்ப் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. ஆனால், கணவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்பெண் கடந்த 6 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர் கடந்த 2 வருடங்களாக தனது தந்தை உடன் வசித்து வந்து உள்ளார்.
இதனிடையே, கடந்த 9 மாதத்திற்கு முன்பு பருவம் அடைந்த மகள், அதன் பிறகும் தனது தந்தை உடன் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், அவரது தாய், அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் ஒன்றை அளிக்க வந்ததாகவும், ஆனால் அதனை அவர்கள் கடந்த 4 நாட்கள் வாங்க மறுப்பதாகவும் கூறி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 13 வயது சிறுமியின் தாய், “எனது கணவர் உடன் இருந்த என் மகளை, அவளது அப்பாவாகிய எனது கணவனும், மகளுக்கு பெரியப்பா மகனாகிய அண்ணனும் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளனர். உடலின் அந்தரங்க பகுதிகளில் அவர்கள் கை வைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து என்னிடம் தெரிவித்ததும், அவளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, புகார் அளிக்க காவல் நிலையம் வந்தேன். ஆனால், இன்ஸ்பெக்டர் இல்லை எனக் கூறி, என்னை காத்திருக்கக் கூறினர். நான் காத்திருந்தேன், வெகு நேரமாகியும் எதுவும் கூறாததால், இப்போது புகாரை வாங்கவில்லை என்றால் நான் வேறு ஏதேனும் முடிவெடுப்பேன் எனக் கூறினேன்.
இதையும் படிங்க: ரஜினி – சீமான் திடீர் சந்திப்பு – இதுதான் காரணமா?
பின்னர், ஒரு வெற்று பேப்பரைக் கொடுத்து புகாராக எழுதக் கூறினர். அதில், நான் இருவரின் பெயரையும் எழுதியிருந்தேன். ஆனால், அவர்கள் ஒருவரின் பெயரை எடுக்கவில்லை. அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே எனக் கூறினர். அது மட்டுமல்லாமல், அப்பா தானே அழைத்து எச்சரிக்கை செய்து விட்டுவிடுவோமா என்றும் அவர்கள் என்னிடம் கூறினர்.
தவறு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடலாமா? எனக்கு ஒரு நியாயம் வேண்டும். எனது மகளின் பிறப்புறுப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது” என கண்ணீருடன் தெரிவித்தார். தற்போது இந்தச் செய்தி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.
The station ’பெத்த அப்பன்தானே விட்ரலாமா..’ தாய் கதறிச் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. போலீசார் அலட்சியமா? appeared archetypal connected Update News 360 | Tamil News Online.